கோவில்.. கோயில்..?

 கோவில்/கோயில் எது சரி..?

வணக்கம் நண்பர்களே,

நாம் அனைவருக்கும் பள்ளி பருவத்திலோ, அல்லது வாழ்வில் எதாவது ஒரு இடத்திலோ நாம் இதைப் பற்றி நண்பர்களோடு விவாதித்திருப்போம்..



டேய் கோவில் தான் சரி என்றும் அதற்கு உங்கள் நண்பர் இல்லை கோயில் தான் சரி என்றும் நடந்திருக்கும் அந்த விவாதம்..

பின்னர் விடை தெரியாமலே போயிருக்கும், நாமும் பள்ளி முடிந்து வீடு போய் சேர்ந்திருப்போம்..

உண்மையில் அதற்கான பதில் தான் என்ன..?

நாம் முன்னொரு பதிவில்,

இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி-வவ்வும்; ஏ முன் இவ்விருமையும்

 என்ற விதியை பார்த்தோம் அல்லவா..

உடனே சிலபேர் கோ+இல் ‌‌..(க்+ஓ) ஓ வவ்வும் ,எனவே கோவில் தான் சரியென உறுதியாக சொல்வார்கள்..

அவசரப்படாமல், தமிழில் இன்னொரு விதி இருப்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

கோ,மா -முன் வரின்,

ய- கரமும் குதிக்கும்

எனும் விதி அது.கோ அல்லது மா முன்னே வந்தால் ய வும் வரும் என்பது தான் அது.

 எனவே,

கோ+இல்= கோவில்/கோயில்

மா+இலை= மாவிலை/மாயிலை 

ய-கரமும் குதிக்கலாம்..


எனவே இரண்டும் சரி என்பது தான் விடை..

இதை உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள பகிருங்கள்..

Comments

Popular posts from this blog

ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..

பிராமண தந்திரம்

நாம் ஏன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்