ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..
ஓரே நாடு ஓரே(சுடு) கார்டு
ஓரே நாடு ஓரே கார்டு என்ற திட்டத்தை அடிமைகளின் அரசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது.. அதன் அவசியம் என்னவென்பதை தமிழர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.. அடிமையாக போகிறோம், எப்படி ஆகப் போகிறோம் என்று தெரிந்து கொண்டே ஆவோம்..
உலகமெங்கும் பரந்து விரிந்த தமிழ் என மொழிப் பெருமை பேசும் ஒர் இனத்துக்கென்றிருந்த ஒரே நிலமும் இல்லாமல் போக போகிறது.. பிறமொழி கலப்பால் தமிழ் மொழி தன் சிறப்பை இழப்பது போலவே,பிற இனக்கலப்பால் தமிழ் நாடும் ஒர் அகதிநிலமாக மாறி பின் நாம் அடிமையாக வாழும் இடமாக மாறப்போகிறது..
இதெப்படி நடக்கும் வாய்ப்பில்லை, நாம் ஆகச்சிறந்தவர்கள் இதை நடக்க விடமாட்டோம் என மறுபடியும் பெருமை பேசவேண்டாம்.. சத்தியமா நடக்கும்..
பாதகங்கள்
ஏற்கனவே திருப்பூரில் ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான வடமாநிலக்காரர்கள் தஞ்சம் புகுந்து பஞ்சம் பிழைக்கின்றனர்..சென்னையிலும் ஏன் நம் தாய் தமிழ் நாடு முழுவதும் இதே நிலைமை தான்.. அவர்கள் சுகமாக வாழ்வே இந்த திட்டம்..
சரி அவர்கள் சுகமாக வாழ்ந்தால் என்ன நம் தமிழர்கள் பிற மாநிலங்களில் உள்ள ரேசன் கடைகளில் பொருள் வாங்கலாமே என்று நடுநிலையென்று சொல்லிக்கொள்ளும் பிறமொமிக்காரன் கேட்பான்.பிறமாநிலங்களின் நிலை என்னவென்பதை நாம் நன்றாகவே அறிவோம்..பிறமாநிலத்தில் மொழிவெறி எப்படி இருக்கும் என்றும், அங்கே தமிழனுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்றும் நாம் கண்கூடாகவே பார்க்கலாம்.. ஆனால் பிற மாநிலங்களில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரப்போவதில்லை..
நம் தமிழ்நாட்டில் மட்டும் இது சீறம்சிறப்புமாக நடைப்பெற்று வடமொழிக்காரன் நன்றாக வாழப்போகிறான்..
அதன் பின் அவன் சந்ததியையும் இங்கே வரவைப்பான்.. நிரந்தரமாக தங்குவான்..இலட்சங்களில் அல்ல பலகோடிகளைத் தொடும் பிறமொழிக்காரனின் எண்ணிக்கை.. அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படும்.. அவன் சத்தியமாக தமிழ் கட்சிக்கோ, திராவிட கட்சியையோ ஆதரிக்கப்போவதில்லை.. அவன் போடும் ஓட்டு அவன் மொழிக்காரனுக்குத்தான்.அதாவது தேசிய கட்சிக்கு தான்
இப்படி மறைமுகமாக தமிழ் நாட்டில் உள்ளே நுழைத்தான் இ(பாஜகவின்)நாசக்காரத் திட்டம்
ஓரே நாடு ஓரே கார்டு திட்டம்..
எதிர்கால நிகழ்வுகள்
அதன்பின் வடமொழிக்காரனுக்கென தனி சட்டமன்ற உறுப்பினர் வரை கேட்பான்..
அவன் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து, அவர்கள் படிக்க,தாய்மொழியான ஹிந்தியை பள்ளியில் கேட்பான். அதன்பின் பேருந்து பலகையில் பெயரை ஹிந்தியில் எழுதக்கேட்பான்..
தானாகவே கடைகளின் பெயர் பலகைகள் ஹிந்தியில் மாறும்..கண்பட்ட இடமெல்லாம் ஹிந்தி மயமாகி பின் காவி மயமாகும் நம் தாய் தமிழ் நாடு..எங்கோ கேட்ட ஹிந்தி மொழி எங்கும் நிறைய ஆரம்பிக்கும்..
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி காரனையும் ஹிந்திமொழியையும் இங்கே வளரச் செய்வான்..
முடிவுரை
தமிழர்களாகிய நாம் இதனையறிந்து , சிந்தித்து செயல்படாவிட்டால் ,
உலகமெங்கும்பரவி,தன் சீர்மையால் பல பெருமை கொண்ட தமிழினம்,உள்ளூரிலே அனாதையாக அகதியாக மாறும் நிலை தூரத்தில் இல்லை..
Comments
Post a Comment