Posts

Showing posts from October, 2020

ஹிந்தி எதிர்ப்பு-பொருளாதார காரணங்கள்

Image
 வணக்கம் தமிழர்களே, சென்ற பதிவில் ஹிந்தி மொழி மற்றும் ஹிந்திகாரர்களின் குடியேற்றத்தால் ஏற்படும் அரசியல் பிரச்சினைகள் குறித்து பார்த்தோம்..இனி பொருளாதார சிரழிவுகள் மற்றும் நோக்கம் குறித்து பார்ப்போம். பொருளாதார காரணங்கள் ஹிந்தி மொழி திணிப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால், ஹிந்தி மொழி சரளமாக வேகமாக தமிழ்நாட்டில் பரவும்.முழு ஒத்துழைப்பை பாசிச அரசுகள் கொடுக்கும். நம் வீடுகளில் ஹிந்தி வந்தால்: தமிழ் நாட்டில் தற்போது நம் வீடுகளில் ஹிந்தி இல்லை,திணிப்பை ஏற்றுக் கொண்ட பின் ஹிந்தி தெரியும் என்றால், உங்கள் வீட்டில் தோட்டக்காரன், டிரைவர், பிளம்பர் போன்ற எண்ணற்ற அன்றாட தேவைப்படும் நபர்கள் அனைத்து ஹிந்தி காரனாகத் தான் இருப்பான்.. உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்றால் ஹிந்தி காரனை வேலைக்கு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஹிந்தி காரன் தமிழ் தொழிலாளர்களை விட குறைந்த ஊதியமே போதும் என்று வேலை செய்வான்.ஏனென்றால் அவன் மாநிலத்தில் பசியை மட்டும் பார்த்த அவனுக்கு நாம் கொடுக்கும் குறைந்த ஊதியமே பெரியது தான்.. நாமும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரை வேலைக்கு அழைப்பிர்கள் தமிழனையா?இல்லை ஊதியம் க...

ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..

  ஓரே நாடு ஓரே(சுடு) கார்டு  ஓரே நாடு ஓரே கார்டு என்ற திட்டத்தை அடிமைகளின் அரசன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது.. அதன் அவசியம் என்னவென்பதை தமிழர்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.. அடிமையாக போகிறோம், எப்படி ஆகப் போகிறோம் என்று தெரிந்து கொண்டே ஆவோம்.. உலகமெங்கும் பரந்து விரிந்த தமிழ் என மொழிப் பெருமை பேசும் ஒர் இனத்துக்கென்றிருந்த ஒரே நிலமும் இல்லாமல் போக போகிறது.. பிறமொழி கலப்பால் தமிழ் மொழி தன் சிறப்பை இழப்பது போலவே,பிற இனக்கலப்பால் தமிழ் நாடும் ஒர் அகதிநிலமாக மாறி பின் நாம் அடிமையாக வாழும் இடமாக மாறப்போகிறது.. இதெப்படி நடக்கும் வாய்ப்பில்லை, நாம் ஆகச்சிறந்தவர்கள் இதை நடக்க விடமாட்டோம் என மறுபடியும் பெருமை பேசவேண்டாம்.. சத்தியமா நடக்கும்.. பாதகங்கள் ஏற்கனவே திருப்பூரில் ஐம்பது இலட்சத்துக்கும் அதிகமான வடமாநிலக்காரர்கள் தஞ்சம் புகுந்து பஞ்சம் பிழைக்கின்றனர்..சென்னையிலும் ஏன் நம் தாய் தமிழ் நாடு முழுவதும் இதே நிலைமை தான்.. அவர்கள் சுகமாக வாழ்வே இந்த திட்டம்.. சரி அவர்கள் சுகமாக வாழ்ந்தால் என்ன நம் தமிழர...

நாம் ஏன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்

 வணக்கம் தமிழர்களே, இன்றைய காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஹிந்திக்கு ஆதரவாக சில நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் பிறமொழியை தாய் மொழியாகக் கொண்ட சில வஞ்சகர்கள் பேசி வருகிறார்கள்.. அவர்களுக்கு நம் மொழி காப்பது அவசியம் இல்லை.. நம் மொழியின் பெருமையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..  வர்ணாசிரம கொள்கைகளைக் ஏற்றுக் கொண்ட சில பேரும் அவர்களோடு சேர்ந்து தமிழின் தனித்தன்மையை இழக்கச் செய்து தமிழை அழிக்க பார்க்கிறார்கள்.. ஏற்கனவே ஹிந்தி மொழி திணிப்பை நம் தமிழர்கள் எதிர்த்த வரலாறு நாம் அறிந்ததே.. இப்போதும் அதன் அவசியம் என்னவென்பதை பார்ப்போம்.. அரசியல் நோக்கம் தேசியக் கட்சிகளை மற்ற எல்லா மாநிலங்களிலும் ஏற்றக் கொண்டிருக்கின்றன.. ஆனால் தமிழ் நாட்டில் அவர்களால் (காமராஜர் அய்யாவுக்கு பின்) காலூன்ற முடியவில்லை.. நம் தமிழர்களை அவர்களின் வாக்காளர்களாக மாற்ற முடியாத காரணத்தால், அவர்கள் (ஹிந்தி காரர்களை) வாக்காளர்களை இங்கே கூட்டம் கூட்டமாக இறக்குமதி செய்கிறார்கள்.. நீங்கள் கண்கூடாக காணலாம் ஹிந்திகாரன் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறான் என்று.. நம் தமிழ்நாட்டில் ஹிந்திகாரனை முழுவதும் நிரப்புவார்கள். அவர்களுக்க...