நாம் ஏன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்

 வணக்கம் தமிழர்களே,

இன்றைய காலகட்டத்தில் தமிழ் நாட்டில் ஹிந்திக்கு ஆதரவாக சில நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் பிறமொழியை தாய் மொழியாகக் கொண்ட சில வஞ்சகர்கள் பேசி வருகிறார்கள்.. அவர்களுக்கு நம் மொழி காப்பது அவசியம் இல்லை.. நம் மொழியின் பெருமையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

 வர்ணாசிரம கொள்கைகளைக் ஏற்றுக் கொண்ட சில பேரும் அவர்களோடு சேர்ந்து தமிழின் தனித்தன்மையை இழக்கச் செய்து தமிழை அழிக்க பார்க்கிறார்கள்..

ஏற்கனவே ஹிந்தி மொழி திணிப்பை நம் தமிழர்கள் எதிர்த்த வரலாறு நாம் அறிந்ததே..

இப்போதும் அதன் அவசியம் என்னவென்பதை பார்ப்போம்..


அரசியல் நோக்கம்

தேசியக் கட்சிகளை மற்ற எல்லா மாநிலங்களிலும் ஏற்றக் கொண்டிருக்கின்றன.. ஆனால் தமிழ் நாட்டில் அவர்களால் (காமராஜர் அய்யாவுக்கு பின்) காலூன்ற முடியவில்லை.. நம் தமிழர்களை அவர்களின் வாக்காளர்களாக மாற்ற முடியாத காரணத்தால், அவர்கள் (ஹிந்தி காரர்களை) வாக்காளர்களை இங்கே கூட்டம் கூட்டமாக இறக்குமதி செய்கிறார்கள்.. நீங்கள் கண்கூடாக காணலாம் ஹிந்திகாரன் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறான் என்று..

நம் தமிழ்நாட்டில் ஹிந்திகாரனை முழுவதும் நிரப்புவார்கள். அவர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும்.. குறிப்பிட்ட சதவிகித வாக்குகள் ஹிந்தி காரனிடம் இருக்கும்.. அவர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணிகளாக மாறுவார்கள்.. அவர்களின் வாக்கை பெற ஹிந்தி மொழி தெரிந்தவனை வேட்பாளராக நிறுத்துவார்கள்.. பிரச்சாரக்கூட்டங்கள் ஹிந்தியில் நடக்கும்.பேனர்கள், சுவரொட்டிகள் ஹிந்தியில் மாறும்.தமிழ்நாட்டில் ஹிந்தி சேனலும் உருவாகும்.. ஹிந்தி காரன் வாக்கு சிந்தாமல் சிதறாமல் தேசிய கட்சிக்கு விழும்.. நம் தமிழர்கள் வாக்கு நாலாபக்கமும் சிதறி வெற்றியும் பறிபோகும்.. தேசிய கட்சி ஆட்சிக்கு வரும்.. அதன் பின் ஹிந்தியே முதன்மை மொழியாக இருக்கும்..

முடிவுரை

அரசியல் அதிகாரத்தை இழந்த எந்தவொரு இனமும் வாழாது வளராது.

அதற்காக தான் நாம் ஹிந்திகார்களின் குடியேற்றத்தையும், ஹிந்தி மொழியையும் எதிர்க்க வேண்டிய கட்டாயம் இப்போது முன்பைவிட அதிகமாக இருக்கிறது.. 


ஹிந்தியினால் ஏற்படும் பொருளாதார சிரழிவுகள் மற்றும் நோக்கம் குறித்து அடுத்த பாகத்தில் பார்க்கலாம்..

Comments

Popular posts from this blog

ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..

பிராமண தந்திரம்