தமிழர் பாதுகாப்பு அரண்கள்

 நம் மூவேந்தர்களின் ஆட்சிமுறையையும், அவர்களின் நற்செயல்களையும் நாம் அறிவோம்.. அவர்களின் படை மற்றும் பாதுகாப்பு அரண்கள் பற்றியும் பார்க்கலாம்..

தலைநகர் காப்பு தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.. தலைநகர் காப்பானது, ஐவகை அரண்களால் காக்கப்பட்டது..

அவை பின்வருமாறு,

  • மதிலரண்
  • நிலவரண்
  • நீரரண்
  • காட்டரண்
  • மலையரண் 

மதிலரண்

 மதிலரண்,மதில், எயில், இஞ்சி,சோ என நால்வகைப்படும்‌‌‍‌.உயரமுடைய அரண் மதில், அவற்றோடு அகலமுடையது எயில், அவற்றோடு திண்மையுடையது இஞ்சி,அம்மூன்றோடு அருமையுடையது சோ..எனவே சோ வரணே சிறந்தவரணாக கருதப்படுகிறது.



நீரரண்

நீரரண் என்பது கோட்டையைச் சுற்றியுள்ள ஆறு,கடல் போன்ற இயற்கை நீர் நிலைகளும், அகழி அல்லது கிடங்கு எனப்படும் செயற்கை அரண்கள் என இருவகைப்படும்.அகழியில் முதலைகள் போன்ற மிருகங்களை வைத்திருப்பது எதிரிகளை தடுக்கும் வழிமுறை..



நிலவரண்

நிலவரண் என்பது பகைவர் அகழியை கடத்தலுடன் கோட்டையை பற்றாமல் இருக்கும் பொருட்டும்,கோட்டை சுற்றி வளைக்கப்பட்டால், கோட்டைக்கு உள்ளிருப்பவர்களுக்கு தேவையான பயிர்களை உற்பத்தி செய்ய விடப்படும் நிலப்பகுதியாகும்.. இந்த நிலப்பகுதியை கடக்கும் முன் பகைவர்கள்,மதிலரணில் உள்ள வீரர்களால் தாக்கப்படுவார்கள்.

காட்டரண்

காட்டரண் என்பது படைவீரர்கள் மறைந்திருக்கக்கூடியதும், பகைவர்கள் எளிதில் புகமுடியாத அளவுக்கு நெருக்கமான, அடர்ந்த மரங்கள் மற்றும் புதர்கள் கொண்டதாகும்.காட்டரண் பொதுவாக மலையரணையடுத்து அமையப்பெற்றிருக்கும்.

மலையரண்

மலையரண் என்பது மக்கள் கூட்டமாக ஏறமுடியாததும், பகைவர்கள் வந்தால் பெருங்கற்களை உருட்டி விட்டு அவர்களை தடுக்க கூடியதாக அமைந்திருப்பது மலையரண்.

மலையரண் சிற்றரசர்கள் மற்றும் குறுநில மன்னர்களுக்கு இல்லாத அரணாகும்.

Comments

Popular posts from this blog

ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..

பிராமண தந்திரம்

நாம் ஏன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்