ஹிந்தி எதிர்ப்பு-பொருளாதார காரணங்கள்

 வணக்கம் தமிழர்களே,


சென்ற பதிவில் ஹிந்தி மொழி மற்றும் ஹிந்திகாரர்களின் குடியேற்றத்தால் ஏற்படும் அரசியல் பிரச்சினைகள் குறித்து பார்த்தோம்..இனி பொருளாதார சிரழிவுகள் மற்றும் நோக்கம் குறித்து பார்ப்போம்.


பொருளாதார காரணங்கள்


ஹிந்தி மொழி திணிப்பை நாம் ஏற்றுக் கொண்டு விட்டால், ஹிந்தி மொழி சரளமாக வேகமாக தமிழ்நாட்டில் பரவும்.முழு ஒத்துழைப்பை பாசிச அரசுகள் கொடுக்கும்.



நம் வீடுகளில் ஹிந்தி வந்தால்:


தமிழ் நாட்டில் தற்போது நம் வீடுகளில் ஹிந்தி இல்லை,திணிப்பை ஏற்றுக் கொண்ட பின் ஹிந்தி தெரியும் என்றால், உங்கள் வீட்டில் தோட்டக்காரன், டிரைவர், பிளம்பர் போன்ற எண்ணற்ற அன்றாட தேவைப்படும் நபர்கள் அனைத்து ஹிந்தி காரனாகத் தான் இருப்பான்.. உங்களுக்கு ஹிந்தி தெரியும் என்றால் ஹிந்தி காரனை வேலைக்கு வைப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை..

ஹிந்தி காரன் தமிழ் தொழிலாளர்களை விட குறைந்த ஊதியமே போதும் என்று வேலை செய்வான்.ஏனென்றால் அவன் மாநிலத்தில் பசியை மட்டும் பார்த்த அவனுக்கு நாம் கொடுக்கும் குறைந்த ஊதியமே பெரியது தான்..

நாமும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் யாரை வேலைக்கு அழைப்பிர்கள் தமிழனையா?இல்லை ஊதியம் குறைவாக கேட்கும் ஹிந்தி காரனையா..? இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தமிழனுக்கு வேலை இருக்காது.. அவனும் குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்ய பணிக்க படுவான்.அழிவது அவன் பொருளாதாரம் மட்டுமல்ல,ஒட்டு மொத்த தமிழர்களின் பொருளாதாரம் தான்.. உங்கள் வீடுகளில் ஹிந்தி வந்தாலே இவ்வளவு பிரச்சினை வரும் ‌.. அப்படியானால் தமிழ் நாடு முழுக்க ஹிந்தி மொழி மற்றும் ஹிந்திகாரன் வந்தால் விபரிதம் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும்.


நம் ஊரில் ஹிந்தி வந்தால்:


சரி ஒரு ஊரில் அதிக அளவில் ஹிந்திகாரன் வந்துவிட்டால், சிறிய சிறிய வேலைகளில் இருந்து தமிழன் வெளியேற்றப்படுவான். சொல்லும் எண்ணிக்கையில் குடுயேறிய பின், பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டு, ஹிந்தி காரன் ஒருவன் கடை ஒன்றை ஆரம்பிப்பான்.. அதுவரை நம் தமிழர்கள் கடையில் பொருள் வாங்கிய அத்தனை ஹிந்தி காரனும் மொத்தமாக அவன்மொழிக்காரன் வைத்திருக்கும் கடைக்குத்தானே போவான்.. நம்மை மாதிரி மொழிப்பற்று இல்லாதவன் இல்லை ஹிந்தி காரன். படிப்படியாக தமிழனின் கடையின் பொருளாதாரம் போகும்.. அந்தக் கடையில் உள்ள தமிழனும் வெளியேற்றப்படுவான்.
வெறும் மளிகைக் கடையோடு நிற்கப் போவதில்லை இது, படிப்படியாக துணிக்கடை, செருப்புக் கடை , பழுது பார்க்கும் நிலையம் என அனைத்திலும் ஹிந்தி மயமாகும்..

தமிழ் நாடு முழுவதும் ஹிந்தி வந்தால்:


பெருநகரங்களிலும் ஹிந்தி நுழைந்து, இங்கே உள்ள வணிக வளாகங்கள், சிறிய சிறிய தொழிற்சாலைகள், உணவகங்கள் போன்றவற்றில் ஹிந்திகாரன் ஆதிக்கம் செலுத்தி நம்மை வெளியற்றுவான்.. அவனால் உருவாக்கப்படும் அனைத்து வேலைகளையும் ஹிந்தி காரனுக்கு மட்டுமே..கண்காணாத இடத்தில் இருந்து வந்த ஹிந்தி காரன் நம் தமிழ்நாட்டில் கண் படும் இடமெல்லாம் நிறைந்திருப்பான்.இங்கே விஜய் அஜித் படங்களுக்கு போட்டியாக சாருக்கான் சல்மான் கான் படமும் ஹிந்தி மொழியிலயே வரும்.. தமிழ் திரையுலகும் நாசமாகபோகும்.

நம் தமிழ் சேனல்கள் ஹிந்தி சிரியல்களை டப்பிங் செய்து ஒளிப்பரப்புவதால் நம் நாடக கலைஞர்கள் பாதிக்கப்பட்டு அவர்கள் போராடியதும் நமக்கு தெரிந்தது தானே..

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்தி உள்ளே வந்து, நம் தமிழர்களின் வேலை போகும், தொழில் போகும் பின்னர் பொருளாதாரம் போனபின் மீண்டும் அடிமையாக ஹிந்தி காரனின் கடையிலோ, வீட்டிலோ பிச்சை எடுக்க போவது உறுதி..

விழித்துக் கொண்டு தமிழன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும், மொழிப் பற்றுக்காக மட்டுமல்ல, நம் சந்ததியினர் அடிமைகளாக மாறாமல் இருக்க..


முடிவுரை:


போரில் எதிரியை கோட்டையின் உள்ளே வரலாம் தடுக்கும் வரைக்கும் தான், கோடை தப்பிக்கும்.. உள்ளே வந்த பின் வென்று விடலாம் என்று நினைத்தால் கோட்டையும் போகும், அரசாட்சியும் போகும்.. கோட்டை என்பது தமிழ் நாடு..எதிரி ஹிந்தி கார்ன்..

வெறும் எட்டு கோடி பேர் நூறு கோடிக்கும் மேற்பட்ட கூட்டத்தோடு போட்டி போடுவதும் என்பது கனவிலும் சாத்தியமில்லை.. நம்மை சேர,சோழ பாண்டிய மன்னனும் இப்போது ஆளவில்லை..

தமிழா விழித்துக் கொள்.. அடிமையாக மாற்ற பெருங்கூட்டம் வருகிறது.. துணிவுடன் எதிர்த்து போராடு..

வாழ்க தமிழ் ‌.வெல்க தமிழர்..

Comments

Popular posts from this blog

ஓரே நாடு ஓரே கார்டு யாருக்காக..

பிராமண தந்திரம்

நாம் ஏன் ஹிந்தியை எதிர்க்க வேண்டும்